சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கடந்த 17 நாட்களாக, இந்தியாவில் தினசரி கொவிட் பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் கீழ்
இடுகை இடப்பட்ட நாள்:
16 DEC 2020 12:55PM by PIB Chennai
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,32,002-ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 3.34 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 26,382 பேருக்கு கொவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 33,813 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொவிட் சிகிச்சை பெறுபவர்களில் 7,818 பேர் குறைந்துள்ளனர்.
நாட்டில் கடந்த 17 நாட்களாக, தினசரி பாதிப்பு 40,000-க்கும் குறைவாக உள்ளது.
குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 94.5 லட்சத்தைக் (94,56,449) கடந்துள்ளது. குணமடைந்தோர் வீதம் 95.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 387 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 11 நாட்களாக, தினசரி உயிரிழப்பு 500-க்குக் குறைவாக உள்ளது. கடந்த 7 நாட்களாக, ஒரு மில்லியன் பேருக்கான புதிய உயிரிழப்பு குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681003
******
(Release ID: 1681003)
(வெளியீட்டு அடையாள எண்: 1681030)
வருகையாளர் எண்ணிக்கை : 188
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam