பிரதமர் அலுவலகம்

முதலீட்டு இந்தியா நிறுவனத்திற்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 08 DEC 2020 9:42AM by PIB Chennai

வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின், 2020 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் முதலீட்டு மேம்பாட்டு விருதை பெற்றுள்ளதற்காக, முதலீட்டு இந்தியா நிறுவனத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின், 2020 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் முதலீட்டு மேம்பாட்டு விருதை வென்றுள்ள முதலீட்டு இந்தியா நிறுவனத்திற்கு எனது வாழ்த்துகள். உலகளவில், முதலீடு செய்வதற்கு விரும்பத்தக்க இடமாக இந்தியாவை உருவாக்கியிருப்பதற்கும், எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடாக ஆக்குவதற்கும் நமது அரசு மேற்கொண்ட குவிந்த முயற்சிகளுக்கு இதுவே சாட்சியமாகத் திகழ்கிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

 

*************(Release ID: 1679040) Visitor Counter : 15