சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
140 நாட்களுக்கு பிறகு கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் குறைந்தது
Posted On:
07 DEC 2020 11:06AM by PIB Chennai
இந்தியா இன்று முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை, இன்று 4 லட்சத்துக்கும் கீழ் (3,96,729) குறைந்தது. இது மொத்த பாதிப்பில் 4.1 சதவீதம். கடந்த 140 நாளில் இது மிகக் குறைந்த அளவு. இதற்கு முன் கடந்த ஜூலை 20ம் தேதி அன்று, கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,90,459 ஆக இருந்தது.
புதிய பாதிப்பை, விட குணமடைவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போக்கு, கடந்த 10 நாட்களாகத் தொடர்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில், 32,981 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 39,109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருதரப்பினர் இடையேயான வித்தியாசம் 6,128 ஆக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 6,519 பேர் குறைந்துள்ளனர்.
ஒரு மில்லியன் பேருக்கு, புதிதாக பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கை வீதமும் உலகளவில் ஒப்பிடும் போது, நம் நாட்டில் குறைவாக உள்ளது. கடந்த 7 நாட்களாக ஒரு மில்லியன் பேருக்கான புதிய பாதிப்பு 182 ஆக உள்ளது.
ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு, கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும், இந்தியாவில் குறைவாக உள்ளது. உலகளவில் ஒரு மில்லியன் பேருக்கு 8,438 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தியாவில் இந்த அளவு 6,988 ஆக உள்ளது.
புதிய பாதிப்பை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைவோர் வீதம் 94.45 சதவீதமாக இன்று அதிகரித்துள்ளது.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 91,39,901-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி இன்று 87 லட்சத்தைக் (87,43,172) கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 391 பேர் உயிரிழந்துள்ளனர். 157 நாட்களுக்குப்பின் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 400க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கான உயிரிழப்பு எண்ணிக்கை வீதமும் நம் நாட்டில் குறைவாக உள்ளது. ஒரு மில்லியன் மக்கள் தொகையில், கொவிட் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உள்ளது. மொத்த எண்ணிக்கை அடிப்படையிலும், ஒரு மில்லியன் பேருக்கான உயிரிழப்பு இந்தியாவில் 101 ஆக உள்ளது. இதுவும் உலகளவில் மிகவும் குறைவு.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678772
******
(Release ID: 1678772)
(Release ID: 1678813)
Visitor Counter : 237
Read this release in:
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada