பிரதமர் அலுவலகம்

ஐஐடி -2020 உலகளாவிய உச்சி மாநாட்டில் பிரதமர் சிறப்புரையாற்றினார்


கொவிட்-19க்கு பிந்தைய நிலை, மீண்டும் கற்றல்,மறு சிந்தனை, மறு கண்டுபிடிப்பு ஆகியவை பற்றியதாக இருக்கும்: பிரதமர்

Posted On: 04 DEC 2020 10:56PM by PIB Chennai

பான்ஐஐடி அமெரிக்கா அமைப்பு ஏற்பாடு செய்த  ஐஐடி-2020 உலகளாவிய உச்சி மாநாட்டில் பிரதமர் சிறப்புரையாற்றினார்.

"சீர்திருத்தம், செயல்படுதல், உருமாற்றம்" என்ற கொள்கைக்கு அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். சீர்திருத்தத்தில், எந்த துறையும் விடுபடவில்லை என அவர் கூறினார்.  44 மத்திய தொழிலாளர் சட்டங்கள், 4 விதிமுறைகளாக ஒருங்கிணைக்கப்பட்டது, உலகிலேயே குறைந்த அளவு பெரு நிறுவன வரி, ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை அதிகரிக்க 10 முக்கிய துறைகளில் உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு திட்டம் போன்ற முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததை அவர் பட்டியலிட்டார்.  கொவிட் -19 தொற்று நேரத்திலும், இந்தியாவுக்கு அதிக அளவு முதலீடு கிடைத்ததும், அதுவும் தொழில்நுட்ப துறையில் அதிக முதலீடு கிடைத்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

நமது இன்றைய செயல்பாடுகள், நாளைய உலகை உருவாக்கும் என்றார்.  கொவிட்-19க்கு பிந்தைய நிலை, மீண்டும் கற்றல்,மறு சிந்தனை, மறு கண்டுபிடிப்பு ஆகியவை பற்றியதாக இருக்கும்.  இது, கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையிலும், தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்களுடன் நமது உலகை மீண்டும் உற்சாகப்படுத்தும்.  இது வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்யும், ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.  கொவிட் தொற்று நேரத்தில், தொழில்துறை மற்றும் கல்வித்துறை இடையிலான ஒத்துழைப்பால் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன என அவர் கூறினார்.  புதிய இயல்புக்கு ஏற்ப, உலகுக்கு இன்று சாதகமான தீர்வுகள் தேவை என அவர் கூறினார்.

தற்சார்பு இந்தியா திட்டம் என்ற கனவுக்கு பான் ஐஐடி இயக்கத்தின்  ஒட்டு மொத்த சக்தி உந்துதலை அளிக்க முடியும்.  வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்தான், இந்தியாவின் தூதர்கள். இந்தியாவின் கருத்துக்களை உலகம் சரியாக புரிந்துகொள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் குரல் முக்கியமானது என பிரதமர் கூறினார்.

2022-ல் இந்தியாவில் 75வது சுதந்திர தினம் குறித்து பேசிய திரு நரேந்திர மோடி, ‘‘இந்தியாவுக்கு திருப்பி அளித்தல்’’ என்ற உயர்ந்த அளவுகோலை பான்ஐஐடி இயக்கம் ஏற்படுத்த வேண்டும் என திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை எப்படி குறிப்பிடுவது என்பது பற்றி வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார். ‘‘ உங்களின் கருத்துக்களை மைகவ் அல்லது நரேந்திர மோடி ஆப்-ல் நேரடியாக பகிரலாம்’’என அவர் கூறினார்.

சமீபகாலமாக ஹேக்கத்தான்என்ற ஆன்லைன் போட்டி கலாச்சாரம் இந்தியாவில் வளர்ந்து வருவதாகவும், தேசிய மற்றும் சர்வதேச பிரச்னைகளுக்கு இளைஞர்கள் தீர்வுகளை அளிக்கின்றனர் என பிரதமர் கூறினார்.  நமது இளைஞர்கள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தவும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளை கற்கவும், சர்வதேச வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய தென் கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படுகிறது என பிரதமர் கூறினார்.  இந்தியா நடத்திய வைபவ் மாநாடு, அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு துறையில் மிகத் திறமையானவர்களை ஒன்றிணைத்தது என அவர் கூறினார். இந்த மாநாடு, அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்பில், எதிர்காலத்தில் கூட்டாக செயல்படும் சூழலை இந்த மாநாடு ஏற்படுத்தியது என பிரதமர் கூறினார்.

இந்தியா மிகப் பெரிய மாற்றங்களை கண்டு வருவதாக பிரதமர் கூறினார். முன்பு வான்-விண் பொறியாளர்களை ஐஐடிக்கள் உருவாக்கியபோது, அவர்களுக்கு வேலை அளிக்க உள்நாட்டில் வலுவான தொழில் சூழல் இல்லை என கூறிய பிரதமர், இன்று, விண்வெளித்துறையில் செய்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சீர்திருத்தங்களால், இந்திய திறமைசாலிகளுக்கு விண்வெளித்துறை திறந்துவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் உருவாகி வருகின்றன. நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களில் சிலர்இதுவரை யாரும் செல்லாத இடத்துக்கு செல்லலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  இந்தியாவில் பல துறைகளில் புதுமையான பணிகள் நடந்து வருகின்றன என அவர் கூறினார்.

ஐஐடி முன்னாள் மாணவர்கள் பலர் உலகளவிய பல துறைகளில் தலைமை பதவிகளில் உள்ளனர்.  அதனால், உருவாகிவரும் புதிய தொழில்நுட்ப உலகுக்கான தீர்வுகளை அளிப்பது குறித்து ஐஐடி முன்னாள் மாணவர்கள் கலந்தாலோசிக்க வேண்டும் என அவர் வலியறுத்தினார். 

**********************



(Release ID: 1678603) Visitor Counter : 266