பிரதமர் அலுவலகம்

டிசம்பர் 4ஆம் தேதின்று, ஐஐடி 2020 உலக உச்சிமாநாட்டில் பிரதமர் முக்கிய உரை நிகழ்த்துகிறார்

Posted On: 03 DEC 2020 9:54PM by PIB Chennai

பான்-ஐஐடி அமெரிக்கா  நாளை (4.12.20) நடத்தும் ஐஐடி-2020 உலக உச்சிமாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, காலை 9.30 மணிக்கு முக்கிய உரை நிகழ்த்துகிறார்.

எதிர்காலம் இப்போதுஎன்ற மையக் கருத்தைக் கொண்டு இந்த ஆண்டின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. உலகளாவிய பொருளாதாரம், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, சுகாதாரம், வாழ்விடப் பாதுகாப்பு, உலகளாவிய கல்வி போன்ற முக்கியப் பிரச்சனைகள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

பான்-ஐஐடி அமெரிக்கா  20 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் ஓர் அமைப்பு. 2003 ஆம் ஆண்டில் இருந்து பான்-ஐஐடி நடத்தி வரும் இந்த உச்சிமாநாட்டில், தொழில், கல்வி, அரசு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். ஐஐடி முன்னாள் மாணவ தன்னார்வலர்கள் சேர்ந்து நடத்தும் அமைப்பு, பான்-ஐஐடி என்பது குறிப்பிடத்தக்கது.

********


(Release ID: 1678239) Visitor Counter : 133