சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
132 நாட்களுக்குப்பின் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைவு
Posted On:
02 DEC 2020 11:30AM by PIB Chennai
கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 132 நாட்களுக்குப்பின் 4.28 லட்சமாக குறைந்துள்ளது.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 4.28 லட்சமாக (4,28,644) குறைந்துள்ளது. 132 நாட்களுக்குப்பின் இது மிகக் குறைந்த அளவு. இதற்கு முன் கடந்த ஜூலை 23ம் தேதி சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,167 ஆக இருந்தது.
தினசரி புதிதாக தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை, கடந்த 3 நாட்களாக சுமார் 30 ஆயிரமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 43,062 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை, தினசரி பாதிப்பு எண்ணிக்கையைவிட கடந்த 5 நாட்களாக அதிகரித்து வருகிறது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 89,32,647-ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோர் வீதம் 94.03 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 501 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677603
******
(Release ID: 1677603)
(Release ID: 1677623)
Visitor Counter : 216
Read this release in:
Odia
,
Telugu
,
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Malayalam