பிரதமர் அலுவலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக திரு ஜோ பைடனுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 08 NOV 2020 9:49AM by PIB Chennai

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரு ஜோ பைடனுக்குபிரதமர் திரு நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரு ஜோ பைடன், உங்களது பிரம்மாண்ட வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! துணை அதிபராக நீங்கள் செயல்பட்ட போது இந்தியா- அமெரிக்கா நாடுகளின் உறவை வலுப்படுத்துவதில் உங்களது பங்களிப்பு முக்கியமானதாகவும், விலைமதிப்பற்றதாகவும்  இருந்தது. இந்தியா அமெரிக்கா நாடுகளின் உறவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த உங்களுடன் இணைந்து பணிபுரிவதற்கு நான் ஆவலாக உள்ளேன்.” என  பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

----- 


(Release ID: 1671216) Visitor Counter : 206