பிரதமர் அலுவலகம்
பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ-வுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
07 NOV 2020 4:51PM by PIB Chennai
பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறையை நான் வாழ்த்துகிறேன். கொவிட்-19 காலகட்டத்தில், குறித்த காலத்துக்குள் இதை செய்து முடிப்பதற்காக பல்வேறு சவால்களை நமது விஞ்ஞானிகள் எதிர்கொண்டார்கள்.
அமெரிக்கா மற்றும் லக்சம்பர்கில் இருந்து தலா நான்கு மற்றும் லித்துவேனியாவிலிருந்து ஒன்று உட்பட ஒன்பது செயற்கைக்கோள்கள் இந்த திட்டத்துடன் ஏவப்பட்டுள்ளன," என்று பிரதமர் கூறியுள்ளார்.
**********************
(Release ID: 1671001)
Visitor Counter : 220
Read this release in:
English
,
Assamese
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam