சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்தது, உலகளவில் இந்தியா முன்னிலை


இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2020 11:39AM by PIB Chennai

 

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர்  எண்ணிக்கை இன்று 75 லட்சத்தை கடந்தது. இதனால் குணமடைந்தோர் பட்டியலில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 53,285 பேர் குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டில் தற்போது 5,61,908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

நாட்டில் உள்ள மொத்த பாதிப்பில், சிகிச்சை பெறுபவர்கள் 6.83% பேர் உள்ளனர்.

கடந்த 2 மாதத்தில், சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 3 மடங்குக்கு மேல் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி, சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 21.16 ஆக இருந்தது

நாட்டில் கடந்த ஜனவரி முதல், கொவிட்-19 பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பரிசோதனை அதிகரிப்பு, பாதிக்கப்பட்டவர்களை விரைவில் கண்டறிந்து, ஏற்ற சிகிச்சை அளிக்க வழிவகுக்கிறது. இந்தியாவில் இன்று கொவிட் பரிசோதனையின் மொத்த எண்ணிக்கை 11 கோடியை (11,07,43,103) தாண்டியது.

2037 பரிசோதனை கூடங்கள் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன், நாட்டின் பரிசோதனை திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது.

நாட்டில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைவோர் விகிதம் 91.68% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 45,321 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது,  496 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669420

----


(வெளியீட்டு அடையாள எண்: 1669456) வருகையாளர் எண்ணிக்கை : 265