சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கடந்த 3 நாட்களாக இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவு
இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2020 11:44AM by PIB Chennai
கடந்த 3 நாட்களாக, இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை,மொத்த பாதிப்பில் 10%-க்கும் கீழ் உள்ளது.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறையும் போக்கு தடையின்றி தொடர்கிறது. நாடு முழுவதும் தொற்று பாதித்தவர்களில் 10ல் ஒருவர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது நாட்டில் 7,15,812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 9.29%. தினசரி தொற்று பாதிப்பும் கடந்த 3 நாட்களாக, 5%-க்கும் கீழ் உள்ளது. இது தொற்று பரவல் தீவிரமாக கட்டுப்படுத்தப்படுவதை காட்டுகிறது. இன்று தினசரி பாதிப்பு 3.8% ஆக உள்ளது.
குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 69 லட்சத்தை (68,74,518)நெருங்கியுள்ளது. சிகிச்சை பெறுபவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து இன்று 61,58,706-ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் 89.20% ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 79,415 பேர் குணமடைந்துள்ளனர். 55,839 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 702 பேர் உயிரிழந்துள்ளனர்.
(வெளியீட்டு அடையாள எண்: 1666712)
வருகையாளர் எண்ணிக்கை : 237
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam