மத்திய அமைச்சரவை

2019-2020-ம் ஆண்டுக்கான உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனஸுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி

Posted On: 21 OCT 2020 3:24PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2019-2020ஆம் ஆண்டுக்கான உற்பத்தியோடு இணைந்த  போனஸுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் ரயில்வே, தபால் துறை, பாதுகாப்புத்துறை, ஈபிஃஎப்ஓ, ஈஎஸ்ஐசி உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் 16.97 லட்சம் கெசடட் அல்லாத ஊழியர்கள் பயன்பெறுவர். இதற்காக ரூ. 2796 கோடி செலவாகும்.

கெசடட் அல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்கு உற்பத்தியோடு சாராத போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. 13.70 லட்சம் ஊழியர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். அரசுக்கு  ரூ.946 கோடி கூடுதலாக செலவாகும்.

உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனஸ் அறிவிப்பால் மொத்தம் 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால் ரூ.3737 கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகும்.

ஆண்டுதோறும் முந்தைய வருடத்தில்  கெசடட் அல்லாத மத்திய அரசு ஊழியர்களின் பணியைக் கருத்தில் கொண்டு துர்கா பூஜா, தசரா காலத்தில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனஸை கெசடட் அல்லாத ஊழியர்களுக்கு உடனடியாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666380

----- 



(Release ID: 1666403) Visitor Counter : 220