சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஒரு மாதத்துக்குப்பின், கொவிட் சிசிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது

Posted On: 09 OCT 2020 11:12AM by PIB Chennai

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு மாதத்துக்குப்பின், முதல் முறையாக, கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் இன்று கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8.93 லட்சம். இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 9ம் தேதி அன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8.97 லட்சமாக இருந்தது

தற்போது,  8,93,592 பேர், கொவிட் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் சதவீதம், மொத்த பாதிப்பில் 12.94-ஆக உள்ளது. இந்த அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59,06,069-ஆக உள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெற்றவர்களுக்குமான இடைவெளி 50 லட்சத்தை தாண்டிவிட்டது

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால், குணமடைந்தோர் வீதம் 85.52 ஆக மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,365 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் புதிதாக 70,496 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 75% பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தமிழகம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

 

கடந்த 24 மணி நேரத்தில் 70,496 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 964 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 358 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.

பொழுது போக்கு பூங்காங்களில் மக்கள் அதிகளவில் கூடுவர் என்பதால், அங்கு கொவிட்-19 தொற்று பாதிப்பை தடுப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவற்றை கீழே கண்ட இணைப்பில் பார்க்கலாம்.

https://www.mohfw.gov.in/pdf/SOPonpreventivemeasurestobefollowedinEntertainmentParksandsimilarplacestocontainspreadofCOVID19.pdfhttps://www.mohfw.gov.in/pdf/SOPonpreventivemeasurestobefollowedinEntertainmentParksandsimilarplacestocontainspreadofCOVID19.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662968

---- 



(Release ID: 1663147) Visitor Counter : 135