சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவின் குணமடைதல் விகிதம் 83 சதவீதத்தை தாண்டியது, சிகிச்சையில் உள்ள நபர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை 41.5 லட்சம் அதிகமாகும்

Posted On: 29 SEP 2020 12:19PM by PIB Chennai

கொரோனாவை எதிர்த்து இந்தியா திறம்பட போராடி வரும் நிலையில், நாட்டில் குணமடைதல் விகிதம் 83 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. சிகிச்சையில் உள்ள நபர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை 41.5 லட்சம் அதிகமாகும்

கடந்த ஒரு மாதத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கையில் 100 சதவீத உயர்வை இந்தியா கண்டுள்ளது. மொத்த பாதிப்புகளில் 83 சதவீதம் பேர் (50 லட்சத்துக்கும் அதிகமானோர்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மொத்த பாதிப்புகளில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே (10 லட்சத்திற்கும் குறைவாக) தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 84,877 நபர்கள் குணமடைந்துள்ளனர். புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 70,589 ஆக உள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51,01,397 ஆகும்.

குணமடைந்தோரின் 73 சதவீதம் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம், தில்லி, ஒடிஷா, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் உள்ளனர்.

மகாராஷ்டிரா மட்டுமே 20,000-க்கும் அதிகமான புதிய குணமடைதல்களுக்கு காரணமாக உள்ள நிலையில், கர்நாடகாவிலிருந்து 6,000 குணமடைதல்கள் பதிவாகியுள்ளன. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1659972

***

 



(Release ID: 1660006) Visitor Counter : 190