சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் கொவிட் தொற்று நோயாளிகள் குணமடைந்துள்ளனர்; 28,472 நோயாளிகள் வீடு திரும்பியுள்ளனர்
7.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர், குணமடையும் விகிதம் 63 சதவீதத்தைத் தாண்டியுள்ளது
19 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் குணமடையும் விகிதம் 63.13 சதத்தை விட அதிகம்
Posted On:
22 JUL 2020 12:34PM by PIB Chennai
ஒரே நாளில், முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 28,472 கொவிட்-19 தொற்று நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்தான், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 7,53,049 ஆக உள்ளது. இதனால் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடையும் விகிதம் 63.13 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரி்த்து வருகிறது. சிகிச்சை பெறுபவர்களை விட, 3,41,916 பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,11,133 என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் குணமடையும் விகிதத்தை விட 19 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் குணமடையும் விகிதம் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பெயர்
|
குணமடையும் விகிதம்
|
தில்லி
|
84.83%
|
லடாக் (யூனியன்
பிரதேசம்)
|
84.31%
|
தெலங்கானா
|
78.37%
|
ஹரியானா
|
76.29%
|
அந்தமான் &
நிக்கோபார் தீவுகள்
|
75.00%
|
ராஜஸ்தான்
|
72.50%
|
குஜராத்
|
72.30%
|
சத்தீஷ்கர்
|
71.81%
|
அசாம்
|
71.05%
|
ஒடிசா
|
70.96%
|
தமிழ்நாடு
|
70.12%
|
மணிப்பூர்
|
69.48%
|
சண்டிகர்
|
68.97%
|
உத்ராகண்ட்
|
67.99%
|
பஞ்சாப்
|
67.86%
|
மத்தியப்பிரதேசம்
|
67.47%
|
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி & டாமன் அண்டு டையூ
|
65.67%
|
இமாசலப்பிரதேசம்
|
64.72%
|
பிகார்
|
63.95%
|
கோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும், கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள தயவுசெய்து இந்த இணையதளத்தைப் பாருங்கள்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA.
*******
(Release ID: 1640391)
Visitor Counter : 290
Read this release in:
Punjabi
,
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam