பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நாளை கலந்துரையாடுகிறார்

உணவு விநியோகம் மற்றும் பிற உதவிகளை செய்த இவர்களின் செயல்பாடுகளை எடுத்துரைத்து, பிரதமர் கலந்துரையாடுகிறார்

Posted On: 08 JUL 2020 2:17PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றினால் அறிவிக்கப்பட்ட முடக்க நிலை காலத்தில், வாரணாசி பொதுமக்களும், அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும் தமது சொந்த முயற்சிகளாலும், மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி செய்ததன் வாயிலாகவும், அங்குள்ள ஒவ்வொருவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்தனர். இத்தகைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி, நாளை காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடி, அவர்களின் அனுபவங்களையும், செயல்பாடுகளையும் எடுத்துரைக்கிறார்.

முடக்க நிலையின் போது வாரணாசியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கிட்டத்தட்ட 20 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 2 லட்சம் ரேஷன் பொருள் பொட்டலங்களையும் மாவட்ட நிர்வாகத்தின் உணவு மையம் வாயிலாகவும், தமது சொந்த முயற்சிகளாலும் விநியோகித்தன.

உணவு விநியோகம் தவிர, முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றையும் விநியோகிக்க இந்த நிறுவனங்கள் உதவின. இவர்களை மாவட்ட நிர்வாகம் “கொரோனா போராளிகளாக” கவுரவித்தது.

கல்வி, சமூகம், சமயம், சுகாதாரம், உணவகங்கள், சமுதாய சங்கங்கள் மற்றும் பிற தொழில் திறன் துறைகளில் இந்த நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.

******



(Release ID: 1637191) Visitor Counter : 209