சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பற்றிய அண்மைச் செய்திகள்.


குணமடைவோர் விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகம். மொத்தம் 1,62,378 நோயாளிகள் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Posted On: 14 JUN 2020 3:35PM by PIB Chennai

கடந்த 24 மணி நேரத்தில் 8,049 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோர் விகிதம் 50 சதவீதத்துக்கும் அதிகமாகியுள்ளது. மொத்தம் 1,62,378 நோயாளிகள் இதுவரை கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது, குணமடைந்தோர் விகிதம் 50.60 சதவீதமாக உள்ளது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் பாதி பேர் குணமடைவதையே இது காட்டுகிறது. உரிய நேர தொற்றுக் கண்டறிதல், முறையான மருத்துவ சிகிச்சை மேலாண்மை ஆகியவை நோயாளிகள் குணமடைவதற்குக் காரணமாகும்.

தற்போது, 1,49,348 பேர் மருத்துவக் கணிகாணிப்பின் கீழ் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் தொற்று கண்டறிவதற்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) சோதனைத் திறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அரசு பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை 646 ஆகவும், தனியார் ஆய்வகங்களின் எண்ணிக்கை 247 ஆகவும் (மொத்தம் 893) அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 1,51,432 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 56,58,614 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்று, மத்திய உள்துறை அமைச்சருடன், மத்திய சுகாதார அமைச்சர், தில்லி துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் கூட்டம் ஒன்றை நடத்தி, தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் கொவிட்-19 நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது, சோதனைகளை அதிகரித்தல், சுகாதாரக் கட்டமைப்பு முன்னேற்பாடுகள் ஆகியவை இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

கொவிட்-19 குறித்த தொழில்நுட்ப விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் பற்றிய அனைத்து அதிகாரபூர்வ, அண்மைத் தகவல்களுக்கு தயவுசெய்து இந்தத் தளங்களை அணுகவும்; https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA .

தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை technicalquery.covid19[at]gov[dot]in என்ற தளத்துக்கு அனுப்பலாம். மற்ற கேள்விகளுக்கு ncov2019[at]gov[dot]in மற்றும் @CovidIndiaSeva என்ற தளங்களை அணுகலாம்.

கொவிட்-19 பற்றிய தகவல் ஏதேனும் தேவையென்றால், தொடர்பு கொள்ள வேண்டிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் உதவி மைய எண்கள்;+91-11-23978046 or 1075 ( கட்டணமில்லா தொலைபேசி). மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உதவி மைய எண்கள் பட்டியல் https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf என்ற தளங்களில் கிடைக்கும்

****



(Release ID: 1631524) Visitor Counter : 229