பிரதமர் அலுவலகம்

திரு. வேத்மார்வா மறைவுக்கு பிரதமர் இரங்கல்.

இடுகை இடப்பட்ட நாள்: 06 JUN 2020 11:58AM by PIB Chennai

மணிப்பூர், மிஜோரம், ஜார்க்கண்ட் மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும், தில்லி காவல்துறை முன்னாள் ஆணையருமான திரு.வேத்மார்வாவின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘’திரு.வேத்மார்வாஜி பொது வாழ்க்கையில் அவர் அளித்த சிறந்த பங்களிப்புக்களுக்காக நினைவு கூரப்படுவார். அவரது அசைக்க முடியாத துணிச்சல் ,அவர் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய போது வெளிப்பட்டது. அவர் மக்களின் மரியாதையைப் பெற்றவராகத் திகழ்ந்தார். அவரது மறைவால் வேதனையடைகிறேன். அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி’’ , என்று பிரதமர் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1629865) வருகையாளர் எண்ணிக்கை : 317