சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்.

Posted On: 30 MAY 2020 5:14PM by PIB Chennai

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 11,264 நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். ஒரே நாளில் அதிகபட்ச அளவில் இப்போது குணம் பெற்றுள்ளனர். எனவே இதுவரையில், நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 82,369 பேர் குணம் பெற்றிருக்கிறார்கள்.

இதனால் குணம் அடையும் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 47.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய நாளில் 42.89 சதவீதமாக இது இருந்த நிலையில், இப்போது 4.51 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதிக அளவிலான நோயாளிகள் குணம் பெற்றிருப்பதை அடுத்து, சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை மே 29ஆம் தேதி 89.987 என்பதில் இருந்து இப்போது 86.422 என்று குறைந்திருக்கிறது. சிகிச்சையில் உள்ள அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

2020 மே 30ஆம் தேதி நிலவரத்தின்படி, நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் கடந்த 14 நாட்களில் 13.3 என இருந்த நிலை மாறி, கடந்த 3 நாட்களில் 15.4 நாட்கள் என உயர்ந்திருக்கிறது. மரண விகிதம் 2.86 சதவீதமாக உள்ளது. 2020 மே 29ஆம் தேதி நிலவரத்தின்படி கோவிட் சிகிச்சையில் இருப்பவர்களில் 2.55 சதவீதம் பேர் தீவிர சிகிச்சையிலும், 0.48 சதவீதம் பேர் வென்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும், 1.96 சதவீதம் பேர் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சையிலும் உள்ளனர். 462 அரசு ஆய்வகங்கள் மற்றும் 200 தனியார் ஆய்வகங்கள் மூலம், கோவிட் தாக்குதலைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யக் கூடிய திறன் அதிகரித்துள்ளது. இதுவரையில் மொத்தம் 36,12,242  பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று 1,26,842 மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பொருத்த வரையில், 942 பிரத்யேக கோவிட் மருத்துவமனைகளில் 1,58,908  தனிமைப்படுத்தல் படுக்கைகள், 20,608  ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 69,384 படுக்கைகள் உள்ளன. 2380 பிரத்யேக கோவிட் சிகிச்சை மையங்களில் 1,33,678 தனிமைப்படுத்தல் படுக்கைகள், 10,916  தீவிர சிகிச்சைப்பிரிவு வசதியுடன் கூடிய படுக்கைகள், 45,750 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. 6,64,330 படுக்கை வசதிகளுடன் தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் 7304 கோவிட் சிகிச்சை மையங்கள் உள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு 119.88 லட்சம் என்-95 முக்கவச உறைகள், 96.14 லட்சம் தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்பு உடைகளை வழங்கியுள்ளது.



(Release ID: 1628146) Visitor Counter : 294