உள்துறை அமைச்சகம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விரைந்து திரும்பிச்செல்ல வசதியாக இயக்கப்படும் ‘ஷ்ராமிக்: சிறப்பு ரயில்களின்’ இயக்கம் குறித்து மாநில மைய அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகமும் ரயில்வே அமைச்சகமும் காணொளி மாநாடு.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல லட்சம் பேரை ஏற்றிக்கொண்டு, 450 ரயில்கள் இயக்கப்பட்டன.
வீட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒவ்வொருவரையும் ஏற்றிச் செல்வதற்காக நாள்தோறும் 100 ரயில்கள் இயக்கப்படும்.
Posted On:
11 MAY 2020 2:00PM by PIB Chennai
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரயில்களின் இயக்கம் குறித்து தெரிந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகமும், மத்திய ரெயில்வே துறையும் இன்று காலை காணொளி மாநாடு நடத்தினர். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மைய அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல லட்சம் பேரை ஏற்றிக்கொண்டு நேற்று புறப்பட்ட 101 ரயில்கள் உட்பட 450க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்தக் காணொளி மாநாட்டின்போது பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது. வீடு திரும்ப விரும்பும் ஒவ்வொருவரும் பயணம் செய்ய உதவும் வகையில், போதுமான அளவு ரயில்கள் விடப்படும் என்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பிற மாநிலங்களில் தங்க நேரிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களின் சொந்த ஊருக்கு, விரைந்து திரும்பும் வகையில் வசதி செய்து கொடுப்பதற்காக அடுத்த சில வாரங்களுக்கு நூறுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும்.
(Release ID: 1622985)
Visitor Counter : 136
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam