மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்த 3,000 பள்ளிகளை மதிப்பீட்டு மையங்களாக திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
प्रविष्टि तिथि:
09 MAY 2020 8:11PM by PIB Chennai
சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்துவதற்கு வகை செய்ய, சிபிஎஸ்இ-யுடன் இணைக்கப்பட்ட 3,000 பள்ளிகளை மதிப்பீட்டு மையங்களாக திறப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை வழங்கியதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் “நிஷாங்க்” நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது அவர், “இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ-யுடன் இணைக்கப்பட்ட 3,000 பள்ளிகள், மதிப்பீட்டு மையங்களாக கண்டறியப்பட்டுள்ளது. மதிப்பீட்டு நோக்கத்துக்காக மட்டும் இந்த பள்ளிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.
அறிவிப்பு: @cbseindia29-யுடன் இணைக்கப்பட்ட இந்தியா முழுவதும் உள்ள 3,000 பள்ளிகள், மதிப்பீட்டு மையங்களாக கண்டறியப்பட்டுள்ளன. மதிப்பீட்டு நோக்கத்துக்காக மட்டும் இந்த பள்ளிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும். #IndiaFightsCoronaVirus#IndiaFightsCorona
========
(रिलीज़ आईडी: 1622634)
आगंतुक पटल : 252
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam