பாதுகாப்பு அமைச்சகம்

கோவிட்-19 வீரர்களுக்கு நாடு நன்றி செலுத்துவதில் இந்திய கடலோரக் காவல் படையும் சேர்கிறது

Posted On: 02 MAY 2020 5:33PM by PIB Chennai

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு இந்திய கடலோரக் காவல் படை உறுதுணையாக நிற்கிறது. மாலுமிகள் குறிப்பாக மீனவ சமுதாயத்தினர், துறைமுகங்கள் மற்றும் இதர முகமைகளுக்கு கூடுதல் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் மூலம் பின்பற்ற வேண்டிய தடுப்பு வழிமுறைகள் குறித்து கற்பிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இயங்கி வருகிறது. இது தவிர, கடலோரக் காவல் படை , கோவிட் சேவகர்களைப் பாராட்டும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்முயற்சிக்கு முன்னணியில் உள்ளது.

‘கோவிட்-19 சேவகர்களுக்கு இந்தியா நன்றி கூறுகிறது’ முன்முயற்சியில் இந்திய கடலோரக் காவல் படை, கப்பல்களில் விளக்குகளை எரியவிட்டு ஒளிரச்செய்தும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகள் மீது மலர்களைத் தூவியும் தீவிரமாகப் பங்கேற்கவுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் மற்றும் மினிகாய் தீவுகள் உள்ளிட்ட தொலைதூரத் தீவுகள் , தொலைக்கோடியில் உள்ள இடங்கள் உள்பட நாட்டின் கடலோரப் பகுதிகள் முழுவதையும் உள்ளடக்கிய 25 இடங்களில், மே 3-ம் தேதி கோவிட்-19 வீரர்களைப் பாராட்டும் வகையில் கப்பல்கள் ஒளிரூட்டப்படும். இதுதவிர, கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர்கள் 5 இடங்களில் கோவிட்-19 மருத்துவமனைகள் மீது ரோஜா இதழ்களைத் தூவும்.

 

-----------------



(Release ID: 1620597) Visitor Counter : 196