பாதுகாப்பு அமைச்சகம்

கொரோனா வைரசை சிதைப்பதற்கான மைக்ரோவேவ் ஸ்டெரிலைசர் உருவாக்கப்பட்டு உள்ளது

Posted On: 30 APR 2020 6:22PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கழகத்தின் உதவியோடு நிகர் நிலை பல்கலைக்கழகமாக பூனாவில் செயல்பட்டு வரும் மேம்பட்ட தொழில்நுட்பத்துக்கான பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் கோவிட்-19 வைரசை சிதைக்கின்ற ”அதுல்யா” (‘ATULYA’ ) என்று பெயரிடப்பட்டுள்ள மைக்ரோவேவ் ஸ்டெரிலைசர் கருவியை உருவாக்கி உள்ளது.  56 டிகிரி முதல் 60  செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் பகுதன்மை வெப்பமாக்கலால் வைரஸ் சிதைவுறுகிறது.

இந்தக் கருவி செலவு குறைவான தீர்வாக இருக்கிறது, இதனை எடுத்துச் சென்றும் பயன்படுத்தலாம் அல்லது ஒரே இடத்தில் நிறுவியும் பயன்படுத்தலாம்.  இந்தக் கருவியை இயக்குவதில் மனிதருக்கு தீங்கு ஏற்படுமா என்று பரிசோதிக்கப்பட்டு இது பாதுகாப்பானதுதான் என்று கண்டறியப்பட்டு உள்ளது.  சுத்தப்படுத்தப்பட இருக்கின்ற பொருளின் அளவு மற்றும் வடிவத்திற்கு ஏற்ப கிருமி நீக்கப் பணி 30 விநாடிகளில் இருந்து 1 நிமிடம் வரை ஆகும்.  இந்தக் கருவியின் தோராயமான எடை 3 கிலோ ஆகும்.  இதனை உலோகமல்லாத பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001WUBB.pnghttps://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0020YCV.png(Release ID: 1620000) Visitor Counter : 23