பிரதமர் அலுவலகம்
பிரதமர் மற்றும் மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூச்சி இடையிலான தொலைபேசி உரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
30 APR 2020 3:50PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் அரசின் ஆலோசகர் டாவ் ஆங் சான் சூச்சியை இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார்.
கொவிட்-19 தொற்று பரவலால் உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் ஏற்பட்டுள்ள நிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சிகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவலை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
முதலில் அண்டைநாடு என்ற இந்தியாவின் கொள்கைக்கு முக்கிய தூணாக விளங்கும் மியான்மரின் முக்கியத்துவம் பற்றி விளக்கிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கொவிட்-19 தொற்று காரணமாக மியான்மரில் ஏற்பட்டுள்ள சுகாதாரம் மற்றும் பொருளாதாரத் தாக்கத்துக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்பதை தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள மியான்மர் குடிமக்களுக்கு இந்திய அரசு இயன்றவரை அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்த பிரதமர், மியான்மரில் உள்ள இந்திய மக்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அளித்து வரும் ஒத்துழைப்புக்காக அரசின் ஆலோசகருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
கொவிட்-19 காரணமாக உருவாகும் தற்போதைய மற்றும் வருங்காலச் சவால்களைச் சந்திக்க சேர்ந்து பணியாற்றுவதற்கும், தொடர்பில் இருப்பதற்கும் இரு தலைவர்களும் இசைவு தெரிவித்தனர்.
(வெளியீட்டு அடையாள எண்: 1619697)
வருகையாளர் எண்ணிக்கை : 235
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam