சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
கோவிட்-19 நோய் பரிசோதனை, தனிமைப்படுத்தும் வசதி, மருத்துவமனைகளிலும் சுகாதார மையங்களிலும் சிகிச்சை அளித்தல், போன்றவை மாற்றுத்திறனாளிகளுக்கும் கிடைக்கும் வகையில் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கு துறை அமைச்சகம் M/O SJ&E அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
Posted On:
29 APR 2020 5:00PM by PIB Chennai
கோவிட்-19 நோய் பரிசோதனை, தனிமைப்படுத்தும் வசதி, மருத்துவமனைகளிலும் சுகாதார மையங்களிலும் சிகிச்சை அளித்தல், போன்றவை மாற்றுத்திறனாளிகளுக்கும் கிடைக்கும் வகையில் அடிப்படை வசதிகள் மாற்றுத் திறனாளிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கு துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது குறைபாடுள்ள நபர்களுக்கான அதிகாரம் வழங்கும் துறை (Department of Empowerment of Persons with Disabilities - DEPwD), செயலாளர் திருமதி சகுந்தலா டி காம்லின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதம் ஒன்றில், கோவிட்-19 பாதிப்பைக் குறைப்பதற்காக கோவிட்-19 மையங்கள், கோவிட்- 19 நோய் பரவாமல் தடுப்பதற்கான அமைப்புகளாகவும், தனிமைப்படுத்தும், சிகிச்சை அளிக்கும் மையங்களாகவும் மருத்துவ நோக்கங்களுக்கான திறனை அதிகரிக்கக்கூடிய பரிசோதனை ஆய்வுக் கூடங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய் எதிர்ப்புத் திறன் குறைவு, தகவல்களை கிரகித்துக் கொள்ளும் தன்மையிலான குறைபாடு, போன்றவைகளால் மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட்-19 தொடர்பான வசதிகளை அணுகுவதற்கு ஏதுவான புறச்சூழல்களும், அம்சங்களும் இல்லை என்பதாலும் தற்போதைய கோவிட்-19 நோய் மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் அதிக அளவில் அச்சுறுத்தலாக உள்ளது.
மாற்றுத்திறனாளிகளும் புரிந்து கொள்ளக் கூடிய இதர வடிவங்களில், கோவிட்-19 நோய் குறித்த தகவல்கள், அவர்களுக்கும் சென்றடைய வேண்டியது பற்றியும், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும், அவர்களது பாதுகாப்பு, உடல்நலனைப் பேணுவது, தூய்மையை உறுதிப்படுத்துவது, அவர்களுக்கான உடன் வரும் துணைகள், கவனித்துக் கொள்பவர்கள், சேவை வழங்குபவர்கள், சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் போன்ற விஷயங்கள் தொடர்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரம் வழங்கும் துறை (DEPwD), ஏற்கனவே விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தப்படும் வசதிகள் உள்ள முகாம்கள், மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் ஆகியவற்றிலும் அவர்களுக்குத் தேவையான இடங்களை ஒதுக்குவது உட்பட அடிப்படை அம்சங்கள் உறுதி செய்யப்படுவது அவசியம்.
தாங்களாகவே நடமாடக் கூடிய திறன் இல்லாதவர்களும், தங்களைக் கவனித்துக் கொள்ளும் துணை இருந்தால் மட்டுமே நடமாட முடியும் என்ற நிலை இருப்பவர்களும், மேலும் சிரமத்துக்கு உள்ளாகாத வகையில், குறிப்பாக இந்த கோவிட்-19 நோய் நெருக்கடி காலத்தில் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் அடிப்படை அம்சங்களை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
(Release ID: 1619338)
Visitor Counter : 236
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam