தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஊரடங்கின் போது, பிரதமர் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ் 7.40 லட்சம் உள்பட 13 லட்சம் உரிமைக் கோரிக்கைகளுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தீர்வு கண்டுள்ளது
Posted On:
28 APR 2020 3:52PM by PIB Chennai
ஊரடங்கு காலத்தில் வருங்கால வைப்பு நிதிக் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதைக் கருத்தில் கொண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) பிரதமர் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ், 7.40 லட்சம் கொவிட்-19 கோரிக்கைகள் உள்பட , மொத்தம் 12.91 லட்சம் உரிமைக் கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டு தொகை வழங்கியுள்ளது. பிரதமர் ஏழைகள் நலத்திட்டத்தின் கொவிட்-19 கோரிக்கைகளுக்கு ரூ.2367.65 கோடி உள்பட, மொத்தம் ரூ.4684.52 கோடி தொகை வழங்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையே, வருங்கால வைப்புநிதி அறக்கட்டளைகள் விலக்கு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 27.4.2020 நிலவரப்படி, 79,743 வைப்புநிதி உறுப்பினர்களுக்கு ,ரூ.875.52 கோடியை , கொவிட்-19 திட்டத்தின் கீழ் விலக்கு பெற்ற வைப்புநிதி அறக்கட்டளைகளும், 222 தனியார் நிறுவனங்கள் ரூ.338.23 கோடியை 54,641 பயனாளிகளுக்கும், 76 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 524.75 கோடியை 24,178 பயனாளிகளுக்கும், 23 கூட்டுறவு நிறுவனங்கள் 924 கோரிக்கைதாரர்களுக்கு ரூ.12.54 கோடியையும் வழங்கியுள்ளன.
மும்பை டாடா கல்சல்டன்சி சர்வீசஸ், குருகிராமன்ட் எச்சிஎல் டெக்னாலஜீஸ், பொவாய், மும்பை எச்டிஎப்சி வங்கி ஆகிய நிறுவனங்கள், உரிமைக்கோரிக்கைகள், தொகை வழங்கல் ஆகியவற்றில் முதல் மூன்று முன்னணி நிறுவனங்களாகத் திகழ்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களில், டேராடூன் ஓஎன்சிஜி, நெய்வேலி என்எல்சி, திருச்சி பிஎச்இஎல் ஆகியவை கொவிட்-19 அதிகபட்ச முன்பணக் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்ட முதல் 3 முன்னணி விலக்கு பெற்ற நிறுவனங்களாகும். இதேபோல, ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு அதிகத் தொகை வழங்கியதில், நெய்வேலி என்எல்சி, டேராடூன் ஓஎன்சிஜி, விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட் ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
(Release ID: 1618980)
Visitor Counter : 269
Read this release in:
English
,
Gujarati
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam