கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கொவிட்-19 காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால் துறைமுக பணியாளர்கள்/தொழிலாளர்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு
துறைமுகத்தால் நேரடியாக பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் இதர ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து துறைமுக பணியாளர்களும் இதில் அடங்குவர்.
Posted On:
28 APR 2020 3:04PM by PIB Chennai
கொவிட்-19 காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால் அனைத்து முக்கிய துறைமுகங்களும் தங்கள் பணியாளர்களை சார்ந்திருப்பவர்களுக்கு அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இழப்பீடு/கருணைத் தொகை வழங்கலாம் என கப்பல் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
தொழிலாளர் பிரிவு இழப்பீடு/
கருணைத் தொகை (ரூபாயில்)
துறைமுகத்தால் நேரடியாகப்
பணியமர்த்தப்பட்டுள்ள
ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட
அனைத்துத் துறைமுகப் பணியாளர்கள் ரூ. 50.00 லட்சம்
இதர ஒப்பந்தத் தொழிலாளர்கள் ரூ. 50.00 லட்சம்
துறைமுகம் சார்ந்த பணியில் ஈடுபட்டிருக்கும் போது கொவிட்-19 தொற்று ஏற்பட்டால் உயிருக்கு ஏற்படும் பாதிப்பை ஈடுகட்ட இந்த நிதியுதவி அறிவிக்கப்படுகிறது. கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்கும்/இழப்பீடு வழங்கலுக்கும்/கருணைத் தொகைக்கும் மற்றும் கொவிட்-19 தான் இறப்புக்கு காரணம் என்று சான்றளிப்பதற்கும் துறைமுகத்தின் தலைவர் தான் உரிய அதிகாரி ஆவார். கொவிட்-19க்கு மட்டுமே பொருந்தும் இந்த இழப்பீடு 30.09.2020 வரை அமலில் இருக்கும், அதன் பின்னர் இது மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
***
(Release ID: 1618979)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam