உள்துறை அமைச்சகம்

கடைகள் திறந்திருப்பது குறித்த உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு பற்றிய விளக்கம்.

Posted On: 25 APR 2020 11:34AM by PIB Chennai

கடைகள் திறந்து இருப்பதை அனுமதிப்பது குறித்த பொது முடக்க நடவடிக்கைகளின் ஒருங்கு திரட்டப்பட்ட வழிகாட்டுதல்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்த உத்தரவை உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

(https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1618049)

அந்த உத்தரவின் படி:

* வணிக வளாகங்களில் உள்ள கடைகளைத் தவிர, மற்ற கடைகளை கிராமப்பகுதிகளில் திறந்து கொள்வத்றகு அனுமதி.

* நகர்ப்புறங்களில் அனைத்து தனித்து இயங்கிவரும் கடைகளும், குடியிருப்புகளுக்கு அருகிலிருக்கும் கடைகளும், குடியிருப்பு வளாகத்தில் உள்ள கடைகளும் திறந்து கொள்ள அனுமதி.

மின்னணு வணிக நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வத்றகு மட்டுமே தொடர்ந்து அனுமதிக்கப்படுகின்றன என்று தெளிவு படுத்தப்படுகிறது.

கொவிட்-19 மேலாண்மைக்கான தேசிய உத்தரவுகளில் குறிப்பிட்டுள்ளபடி, மதுபானங்கள் மற்றும் இதர பொருள்களின் விற்பனை மீதான தடை தொடர்ந்து நீடிப்பதாக மேலும் தெளிவு படுத்தப்படுகிறது.

ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளபடி, கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகள் என, அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் அறிவிக்கப்பட்ட கிராமப்புற, நகர்ப்புறப் பகுதிகளில் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படமாட்டாது.

***


(Release ID: 1618121) Visitor Counter : 256