உள்துறை அமைச்சகம்
ஒற்றை நிறுவன அடையாளங்கள் மற்றும் பல நிறுவன அடையாளங்களைக் கொண்டுள்ள பொருள்களை விற்கும் பெரு வணிக வளாகங்கள் (Single and Multi-brand Malls) தவிர மற்ற பிரிவுகளில் உள்ள சில கடைகளைத் திறக்க அனுமதிக்கலாம் என்று மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
நோய்த் தாக்குதல் அதிகமாக உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் / கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு இந்த தளர்வுகள் பொருந்தாது
Posted On:
25 APR 2020 12:47AM by PIB Chennai
கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் தொகுக்கப்பட்ட, திருத்திய வழிகாட்டுதல்களின் கீழ், நோய்த் தாக்குதல் அதிகம் இல்லாத / கட்டுப்பாட்டு மண்டலங்களில் வராத பகுதிகளில் சில செயல்பாடுகளுக்கு விதிவிலக்கு அளித்து 15.04.2020 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டது.
(https://www.mha.gov.in/sites/default/files/MHA%20order%20dt%2015.04.2020%2C%20with%20Revised%20Consolidated%20Guidelines_compressed%20%283%29.pdf
வணிக மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விதிகளைத் தளர்த்திய மத்திய உள்துறை அமைச்சகம், அந்தந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கடைகள், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்துக் கடைகளையும் திறக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. குடியிருப்பு வளாகங்களுக்கு அருகிலிருக்கும் தனிப்பட்ட கடைகள் உள்ளிட்டவற்றுக்கும் இது பொருந்தும்.
மார்க்கெட் வளாகங்களில் உள்ள கடைகள், நகராட்சி கார்ப்பரேஷன்கள் மற்றும் நகராட்சி வரம்புக்குள் வராதவற்றை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒற்றை மற்றும் ஒற்றை நிறுவன அடையாளங்கள் மற்றும் பல நிறுவன அடையாளங்களைக் கொண்டுள்ள பொருள்களை விற்பனை செய்யும் பெரு வணிக வளாகங்களை (Single and Multi-brand Malls)
திறப்பதற்கு எந்தப் பகுதியிலும் அனுமதி இல்லை.
அனுமதிக்கப்பட்ட கடைகளை 50 சதவீத ஊழியர் வருகையுடன் மட்டும் திறக்க வேண்டும் என்பது கட்டாயம். பணியில் இருப்பவர்கள் முகக்கவச உறை அணிய வேண்டியதும் கட்டாயம். தனி நபர் இடைவெளி நடைமுறைகளை அலுவலர்கள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.
நோய்த்தாக்குதல் அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் / கட்டுப்பாட்டு மண்டலங்களில், இந்தத் தளர்வுகள் பொருந்தாது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.
அதிகாரப்பூர்வ தகவலைக் காண இங்கே கிளிக் செய்யவும்
*****
(Release ID: 1618115)
Visitor Counter : 333
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam