தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பிரதமர் ஏழைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் விதிவிலக்கு அளிக்கப்பட்ட வைப்புநிதி அறக்கட்டளைகள் 40,826 உறுப்பினர்களுக்கு ரூ. 481.63 கோடி வழங்கியுள்ளன
Posted On:
20 APR 2020 6:57PM by PIB Chennai
கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க உதவும் வகையில் ஊழியர் வைப்புநிதியில் இருந்து வைப்புத் தொகையைப் பெறுவதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அரசு அறிவித்திருந்தது. இது பிரதமர் ஏழைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்பட்டு, ஊழியர் வைப்பு நிதித் திட்டத்தில் இதற்கென 68 எல் (3) என்ற புதிய பத்தி ஒன்றை அறிமுகப்படுத்தி 2020 மார்ச் 28 அன்று அவசர அறிவிக்கையையும் அரசு வெளியிட்டது. இந்த ஏற்பாட்டின் கீழ் திருப்பிச் செலுத்த தேவையில்லாத வகையில் மூன்று மாதங்களுக்கான அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி அளவுக்கு அல்லது உறுப்பினரின் கணக்கில் உள்ள தொகையில் 75% வரை, இதில் எது குறைவானதோ அதை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதற்கும் குறைவான தொகையையும் உறுப்பினர் எடுத்துக் கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியிலும் விதிவிலக்கு அளிக்கப்பட்ட வைப்புத்தொகை அறக்கட்டளைகள் இதற்கு உரிய வகையில் செயலாற்றியுள்ளன என்பது பெருமைப்படத் தக்கதாகும். ஏப்ரல் 17ஆம் தேதி காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க உதவும் வகையில் விதிவிலக்கு அளிக்கப்பட்ட வைப்புநிதி அறக்கட்டளைகளால் பத்தி 68 எல்-இன் கீழ் ரூ. 481.63 கோடி (அதாவது ரூ. 481,63,76,714) இதுவரை 40,826 உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
(Release ID: 1616774)
Visitor Counter : 205
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada