உள்துறை அமைச்சகம்

கொவிட்-19ஐ எதிர்த்துப் போரிடுவதற்கான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளின் கீழ் அத்தியாவசியமற்ற பொருள்களை மின்னணு வணிகத்தின் மூலம் விநியோகிப்பதை அரசு தடை செய்கிறது

Posted On: 19 APR 2020 1:00PM by PIB Chennai

கொவிட்-19 எதிர்த்துப் போரிடுவதற்கான தேசிய பொதுமுடக்கத்தின் தொடர்பாக, அனைத்து அமைச்சகங்கள்/துறைகளுக்கான ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், சில நடவடிக்கைகளுக்கு விலக்கு அளித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. (https://www.mha.gov.in/sites/default/files/MHA%20order%20dt%2015.04.2020%2C%20with%20Revised%20Consolidated%20Guidelines_compressed%20%283%29.pdf)

மேற்கண்ட ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்கும் மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு, பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனத் தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்வதற்காக மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் மட்டுமே, அவசியமான அனுமதிகளோடு செல்ல அனுமதிக்கப்படும்.

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தொடர்பான ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட விதிமுறைகளின் மேற்கண்ட ஏற்பாட்டின் படி, கொவிட்-19 எதிர்த்துப் போரிடுவதற்கான பொதுமுடக்க கட்டுப்பாடுகளின் கீழ் அத்தியாவசியமற்ற பொருள்களை மின்னணு வணிகத்தின் மூலம் விநியோகிப்பதை அரசு தடை செய்கிறது.

அதிகாரப்பூர்வ ஆவணத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்

***
 


(Release ID: 1616038) Visitor Counter : 245