சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
கோவிட்-19 தொற்று காரணமாக அமலில் உள்ள பொது முடக்கத்தின் போது மூத்த குடிமக்களுக்கும் அவர்களை பராமரிப்பவர்களுக்கும் அறிவுரைகள்
Posted On:
16 APR 2020 4:25PM by PIB Chennai
கோவிட்-19 காரணமாக அமலில் உள்ள பொது முடக்கத்தின் போது மூத்த குடிமக்களும் அவர்களை பராமரிப்பவர்களும் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மற்றும் புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மூப்பியல் மருத்துவத்துறையுடன் இணைந்து சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தயாரித்துள்ளது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு, சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர், திரு. ஆர். சுப்ரமணியம் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் 19 காலத்தில் தொற்றுகளுக்கு ஆளாகும் வாய்ப்பு 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, குறிப்பாக மருத்துவ நிலைகளில் இருப்பவர்களுக்கு, அதிகம் என்று கூறியுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும், மூத்த குடிமக்களுக்காக பணியாற்றும் அனைத்து நிறுவனங்களிலும் மற்றும் இதில் பணியாற்றும் அரசு சார்பற்ற அமைப்புகள் மூலமும் இந்த் அறிவுரையை பெரிதும் விளம்பரப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த அறிவுரையை பற்றிய விவரங்களுக்கு, கீழ் காணும் https://static.pib.gov.in/WriteReadData/userfiles/advisory%20-%20Copy%201.pdf இணையத் தொடர்பைக் காணவும்.
***
(Release ID: 1615106)
Visitor Counter : 241
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam