சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் 19 பற்றிய சமீபத்திய தகவல்கள்

Posted On: 12 APR 2020 6:38PM by PIB Chennai

நாட்டில் கோவிட் 19 நோய் பரவாமல் தடுப்பது, பரவுவதைக் கட்டுப்படுத்துவது, முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு மேலாண்மை ஆகிய செயல்களுக்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து, இந்த நோய்க்கு எதிராக நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமாக, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இவை மிக உயரிய அளவில் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

 

அவசரகால அடிப்படையில், நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் கோவிட்-19 பரிசோதனைக்கான திறனை அதிகப்படுத்தவேண்டும் என்பதற்காக, நாட்டிலுள்ள பிரபலமான பல்வேறு மருத்துவக்கழகங்களுக்கும், இந்தப் பொறுப்பைப் பகிர்ந்தளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

நேற்று முதல் தற்போது வரை நாடு முழுவதும் மேலும் 909 பேர் கோவிட்19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. 716 பேர் குணமடைந்துள்ளனர்/ சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டுவிட்டனர். இன்று வரை 273 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கோவிட்19 நோய்க்கென அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனைகள், தனி படுக்கை வசதிகள், தீவிர சிகிச்சைப்பிரிவு (ICU) படுக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தப்படுதற்கான வசதிகள் போன்றவை உட்பட ஆரம்பகால மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதிலும், அரசு கவனம் செலுத்தி வருகிறது. 12.4.2020 அன்று நிலவரப்படி .8356 நோயாளிகளுக்கு 1671 படுக்கைகள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது (ஓரளவு மற்றும் மிகத் தீவிரமான மருத்துவ அறிகுறிகளுடன் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளில் 20 சதவீதம்). தற்போது 1,05,980 படுக்கைகள் உள்ளன. நாடு முழுவதும் கோவிட்19 நோய்க்கென அர்ப்பணிக்கப்பட்ட 601 மருத்துவமனைகளில் உள்ள தனி படுக்கைகளின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

 

நாட்டின் பல்வேறு இடங்களிலும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சைளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனைகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

 

ஆயத்த நடவடிக்கைகளுக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுகாதாரப் பணியாளர்களுக்கான பயிற்சி அளிப்பதில் AIIMS  எய்ம்ஸ், NIMHANS நிமான்ஸ் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ அமைப்புகள் மூலம், கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

 

கோவிட் 19 பற்றிய சரியான, சமீபத்திய தகவல்கள், கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப விவகாரங்கள், விதிமுறைகள் மற்றும் அறிவுரைகள் பற்றி அறிந்துகொள்ள, இந்த இணையதளத்திற்குத் தொடர்ந்து வருகை தாருங்கள்https://www.mohfw.gov.in/.

 



(Release ID: 1613831) Visitor Counter : 161