பிரதமர் அலுவலகம்
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
Posted On:
12 APR 2020 1:18PM by PIB Chennai
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில், “சிறப்புமிக்க ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் நல்வாழ்த்துகள். இயேசுபிரானின் உன்னதமான சிந்தனைகளை, குறிப்பாக ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற அவரது உறுதியான கடப்பாட்டை நினைவு கூர்வோம். இந்த ஈஸ்டர் பண்டிகை, கொவிட்-19 தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வருவதற்கும், ஆரோக்கியமான புவியை உருவாக்குவதற்கும் நமக்கு கூடுதல் வலிமையை அளிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
****
(Release ID: 1613604)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam