பிரதமர் அலுவலகம்

இந்த சவாலான சமயத்தில் இந்தியா-பிரேசில் இடையேயான உறவுகள் முன்னெப்போதும் விட வலுவடைந்துள்ளன - பிரதமர்

प्रविष्टि तिथि: 10 APR 2020 2:15PM by PIB Chennai

இந்த சவாலான சமயத்தில் இந்தியாவுக்கும், பிரேசிலுக்கும் இடையேயான உறவுகள் முன்னெப்போதும் விட வலுவடைந்திருப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்தியா, பிரேசில் நாட்டுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மருந்தை வழங்கத் தீர்மானித்திருப்பதற்கு நன்றி தெரிவித்து, பிரேசில் அதிபர் ஜெயர் எம்.போல்சோனரோ இட்ட டிவிட்டர் பதிவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்தார்.

“இந்த பெருந்தொற்றுக்கு எதிரான மனித குலத்தின் போராட்டத்திற்கு உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

*****


(रिलीज़ आईडी: 1612964) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam