சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த சமீபத்திய தகவல்கள்

Posted On: 07 APR 2020 6:21PM by PIB Chennai
நோய் பரவுதலைக் கட்டுப்படுத்தல், தொகுப்புநிலை கட்டுப்படுத்தல் குறித்த வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிய தகவல்கள் சேர்க்கப்பட்ட பயிற்சித் திட்டங்களையும், கோவிட்-19 மேலாண்மைக்கான காணொளி காட்சிகளையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவை https://www.mohfw.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன வகைப்படுத்துதல் மற்றும் முடிவெடுத்தல் நடைமுறையில் வெவ்வேறு வகையான கோவிட்-19 பாதிப்புகள் குறித்து மூன்று வகையான மையங்கள் உருவாக்கப்படலாம் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று பாதித்த நோயாளிகளுக்கு ஏற்ற சிகிச்சை மையமாக எது இருக்கும் என்பதை முடிவு செய்ய இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது: 1. கோவிட் சிகிச்சை மையம் (சி.சி.சி.): a. மிதமான அல்லது மிக மிதமான பாதிப்பு உள்ளவர்கள் அல்லது கோவிட் சந்தேகத்துக்கு உரியவர்கள் b. நடமாடும் சிகிச்சை மையங்களை விடுதிகள், உணவகங்கள், பள்ளிகள், விளையாட்டு அரங்குகள், தங்குமிடங்கள் போன்ற இடங்களில் தனியார் மற்றும் அரசு இடங்களில் அமைக்கலாம். c. தேவை ஏற்பட்டால், இப்போதுள்ள தனிமை முகாம் வசதிகளை கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்றலாம். d. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரத்யேகமான கோவிட் சுகாதார மையங்களுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளை அனுப்புவதற்கு குறைந்தபட்சம் ஒரு பிரத்யேக கோவிட் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 2. பிரத்யேகமான கோவிட் சுகாதார மையம் (டி.சி.எச்.சி.): a. மிதமானவை என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடப்பட்ட எல்லா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். b. இது முழுக்கவே ஒரு தனிப்பட்ட மருத்துவமனையாகவோ அல்லது ஒரு மருத்துவமனையில் தனிப்பட்ட பிளாக் பகுதியாகவோ இருக்கலாம். (தனியான நுழைவு / வெளியேற்ற / நடமாட்ட வசதிகள் கொண்டதாக இருத்தல் நல்லது) . c. ஆக்சிஜன் அளிக்கும் வசதி உறுதி செய்யப்பட்ட படுக்கை வசதிகள் இந்த மருத்துவமனைகளில் இருக்க வேண்டும். 3. பிரத்யேக கோவிட் மருத்துவமனை (டி.சி.எச்.): a. தீவிரமானது என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடப்பட்டவர்களுக்கு விரிவான முழுமையான சிகிச்சைகள் அளிப்பதாக இருக்கும். b. இது தனிப்பட்ட ஒரு மருத்துவமனையாகவோ அல்லது ஒரு மருத்துவமனையின் ஒரு பிளாக் ஆகவோ (நுழைவு/ வெளியேறும் வாயில் தனியாக இருப்பது நல்லது) இருக்கலாம். c. முழுமையான வசதிகளைக் கொண்ட ஐ.சி.யூ.க்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் தருவதற்கான வசதி உறுதி செய்யப்பட்ட படுக்கைகள் இருக்க வேண்டும். இப்போதைய நிலையில் 4421 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்ப்டுள்ளது. 117 பேர் இறந்துள்ளனர். 326 பேர் நலம் பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

(Release ID: 1612167) Visitor Counter : 216