சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் 19 பற்றிய தற்போதைய தகவல்கள்

Posted On: 06 APR 2020 5:27PM by PIB Chennai

கொவிட்19 தொற்று இதுவரை 4,067 பேருக்கு பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், 109 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 291 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து உள்ளனர்.

 

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிவரங்களின் படி, தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள நோயாளிகளின் விவரங்கள் குறித்துப் கீழ்க்கண்ட விவரங்கள் தெரிய வருகின்றன:

 

பாலின அடிப்படையில் நோயாளிகள்

 

   • 76 சதவீதம் பேர் ஆண்கள்

 

   • 24 சதவீதம் பேர் பெண்கள்

 

வயது அடிப்படையில் நோயாளிகள்

 

   • 47 சதவீதம் பேர் 40 வயதுக்கு கீழானவர்கள்

 

   • 34 சதவீதம் பேர் 40 முதல் 60 வயது வரையிலானவர்கள்

 

   • 19 சதவீதம் பேர் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்

 

கொவிட்-19 நோய் காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளவர்களின் விவரங்களைப் பார்க்கையில் கீழ்க்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளன:

 

மரணங்கள் - பாலின அடிப்படையில்

 

 • 73 சதவீதம் பேர் ஆண்கள்

 

 • 27 சதவீதம் பேர் பெண்கள்

 

மரணங்கள் - வயது அடிப்படையில்

 

 • 63 சதவீதம் பேர் முதியவர்கள் (60 மற்றும் 60-க்கும் மேற்பட்டவர்கள்)

 

 • 30 சதவீதம் பேர் 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்

 

 • 7 சதவீதம் 40 வயதுக்குக் கீழானவர்கள்

 

இறந்தவர்களில் 86 சதவீதம் பேருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்துள்ளன.

 

தொற்று நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்று உறுதி செய்யப்பட்டவர்களில், 19 சதவீதம் பேர்தான் முதியவர்கள் என்றபோதிலும், இறந்தவர்களில் 63 சதவீதம் பேர் முதியவர்கள் என்பதால், இந்த நோய், முதியவர்களைத் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. மேலும், உயிரிழந்தவர்களில், 60 வயதுக்குட்பட்டவர்கள் 37 சதவீதம் பேர்தான் என்றபோதிலும், இறந்தவர்களில் 86 சதவீதம் பேருக்கு மற்ற நோய்களும் இருந்தது தெரியவந்துள்ளதால், பிற நோய்கள் உள்ள, இந்த வயதுக்குட்பட்டவர்களும், இந்தத் தொற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் அதிகமாக உள்ளது.

 

கொவிட் 19 தொடர்பான உண்மையான, தற்போதைய தகவல்கள் பற்றியும், கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள், விதிமுறைகள் மற்றும் அறிவுரைகள் பற்றியும் தெரிந்து கொள்ள, https://www.mohfw.gov.in/. இந்த இணையதளத்தை பார்க்கவும்.

*****(Release ID: 1611912) Visitor Counter : 141