மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள்/ டிஜிபி களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் காணொளி மூலம் கலந்துரையாடல்
Posted On:
01 APR 2020 3:14PM by PIB Chennai
மத்திய அமைச்சரவை செயலாளர் இன்று தில்லியிலிருந்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், டிஜிபி களுடன் காணொளி மூலம் கலந்துரையாடலை நடத்தினார்
- தப்ளிகி ஜமாத்தில் பங்கேற்றவர்களைத் தேடி கண்டுபிடிப்பது கோவிட்-19 தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகமாகப் பாதிப்பதாக உள்ளது என்று மாநிலங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பங்கேற்றவர்களைத் தேடும் நடவடிக்கையை, போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என்று மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
- தப்ளிகி ஜமாத்தில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள், விசா விதிமுறைகளை மீறியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. விசா விதிமுறைகளை மீறிய வெளிநாட்டவர்கள் மீதும், இந்த நிகழ்ச்சியை நடத்திய அமைப்பாளர்கள் மீதும், நடவடிக்கை எடுக்குமாறு அந்த மாநிலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை, அடுத்த வாரத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவதில், பயனாளிகளுக்கு ரொக்கப் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்பதால் அதிக அளவில் பணப்புழக்கம் இருக்கும். எனவே இத்திட்டத்தை செயல்படுத்தும் போது, சமூக விலகலை உறுதி செய்யும் வகையில், பல கட்டங்களாகச் செயல்படுத்த வேண்டும்.
- நாடு முழுவதும், முழு அடைப்பு, பயனுள்ள முறையில் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்துக் கொள்ளப்பட்டது. சமூக விலகலை மேற்கொள்ளும் அதேசமயம், எந்தவிதத் தடங்கலும் இல்லாமல், மாநிலங்களுக்கிடையிலான சரக்குப் போக்குவரத்து நடைபெறுவதை, மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
- அத்தியாவசிய பொருள்களின் உற்பத்தி, உறுதி செய்யப்படவேண்டும். இதுபோன்ற பொருட்ள்களுக்கான, பொருள்கள் வழங்கு தொடர் (சப்ளை செயின்) தொடர்ந்து பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
- ***
(Release ID: 1609973)
Visitor Counter : 262
Read this release in:
English
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam