பிரதமர் அலுவலகம்

ஜனதா ஊரடங்கை நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள்

நாட்டில் தன்னலமற்ற சேவை வழங்குபவர்களுக்கு நாளை மாலை 5 மணிக்கு நன்றி தெரிவிக்க வேண்டுகோள்

Posted On: 21 MAR 2020 6:37PM by PIB Chennai

வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கிணங்க, நாளை மார்ச் 22 அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஜனதா ஊரடங்கைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

துபோன்ற கடினமான நேரங்களில் தேசத்திற்கு தன்னலமற்ற சேவையை வழங்குவோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாளை மாலை 5 மணிக்கு நாட்டு மக்கள் தங்கள் வீட்டு வாசல்களிலும், அவர்கள் வீடுகளின் பால்கனிகளிலும் நின்று ஐந்து நிமிடங்களுக்கு கைதட்டியோ அல்லது மணிகளை ஒலிக்க செய்வதன் மூலம் நன்றியைத் தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.



(Release ID: 1609125) Visitor Counter : 232