பாதுகாப்பு அமைச்சகம்

பிரதமரின் நிவாரண நிதிக்கு பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிக்கவுள்ளனர்; பங்களிப்பு ரூ.500 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAR 2020 3:05PM by PIB Chennai

கொவிட்-19க்கு எதிரான பணிகளுக்கான பிரதமரின் நிவாரண நிதிக்கு (பிஎம்-கேர்ஸ்) பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்கவுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளான, இராணுவம், கப்பல் படை, விமானப்படை, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் இணைந்து  பங்களிக்கும் தொகை சுமார் ரூ.500 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

****


(வெளியீட்டு அடையாள எண்: 1609044) வருகையாளர் எண்ணிக்கை : 235