பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 குறித்து பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

Posted On: 18 MAR 2020 10:38PM by PIB Chennai

 

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த நடைபெற்றுவரும் முயற்சிகள் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வழிவகைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் ஆய்வுக்கூட வசதிகளை மேலும் அதிகரிப்பதும் அடங்கும்.

கொவிட்-19 தொற்றை எதிர்த்து முறியடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைகளில் தனிநபர்கள், உள்ளூர் சமுதாயத்தினர், அமைப்புகளைச் சேர்ந்தோர் தீவிரமாகப் பங்கேற்கச் செய்வதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்குமாறு அதிகாரிகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் அவர் வலியுறுத்தினார்.

பல்வேறு மாநில அரசுகள், மருத்துவத் துறையினர், துணை மருத்துவ ஊழியர்கள். ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகள், விமானப்போக்குவரத்து துறையுடன் தொடர்புடையவர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் இதரப் பிரிவினர் உட்பட கொவிட்-19 பரவுவதை முறியடிக்கும் முன்னணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதுதொடர்பாக பிரதமர், 2020 மார்ச் 19ஆம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். இதில், கொவிட்-19 மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்பான விஷயங்கள் பற்றி அவர் உரையாற்றுவார்.

                                ******


(Release ID: 1607050) Visitor Counter : 236