மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பில் நடத்தப்படும் 20-வது ‘வேவ்ஸ் திரைப்படச் சந்தை’ கோவாவில் இன்று (நவம்பர் 20, 2026) தொடங்கியது. இந்திய மற்றும் சர்வதேசத் திரையுலகினரை இணைப்பதன் 20 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் இந்த ஐந்து நாள் விழா, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஒன்றிணைக்கிறது. தொடக்க விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகச் செயலாளர் திரு சஞ்சல் குமார், 2007-ல் 18 நாடுகளைச் சேர்ந்த 204 பிரதிநிதிகளுடன் தொடங்கிய இத்தளம், தற்போது 2,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘இந்தியாவில் உருவாக்குவோம், உலகிற்காக உருவாக்குவோம்’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்தியப் படைப்பாளிகளுக்குச் சர்வதேசச் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் தளமாக இது திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட விழா இயக்குநர் திரு அசுதோஷ் கோவரிகர் பேசுகையில், நிறைவடையாத திரைக்கதை முதல் முழுமையடைந்த திரைப்படம் வரை அனைத்து நிலைகளிலும் படைப்பாளிகளுக்கு இத்தளம் துணைநிற்பதாகக் கூறினார். உலகளாவிய திரைத்துறை வல்லுநர்களை ஒன்றிணைப்பதன் மூலம், பன்முகத்தன்மை கொண்ட இந்தியக் கதைகள் சர்வதேசப் பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் முக்கியத் தளமாக ‘வேவ்ஸ் திரைப்படச் சந்தை’ செயல்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338970®=3&lang=1
-----
TV/SE/SH