மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்படும் நாளைய படைப்பாளிகள் (சிஎம்ஓடி) முன்னெடுப்பின் ஆறாவது பதிப்பு, கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடத்தப்படுகிறது. நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 இளம் திறமையாளர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை, பாடல் உருவாக்கம், இசையமைப்பு, ஒலிப்பதிவு, ஆடை வடிவமைப்பு, சிகையலங்காரம் - ஒப்பனை, கலை இயக்கம், அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, பின்னணிக் குரல் ஆகிய 13 துறைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களை இத்திட்டம் ஒன்றிணைக்கிறது. இந்திய திரைப்படம், தொலைக்காட்சி நிறுவனத்தின் 13 பேர் கொண்ட தேர்வுக் குழு இதற்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த நிலையில், 12 பேர் கொண்ட குழு இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் புனேவில் உள்ள இந்திய திரைப்படம், தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து 48 மணி நேர திரைப்படத் தயாரிப்புப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பாளர்கள் குழுவாக இணைந்து 48 மணி நேரத்தில் குறும்படங்களை உருவாக்குவர். மேலும், சிஎம்ஓடி திறமை முகாம் மூலம் தயாரிப்பு நிறுவனங்கள், ஸ்டுடியோக்கள், ஓடிடி தளங்கள், ஒளிபரப்பு நிறுவனங்களுடன் இளம் படைப்பாளிகள் நேரடியாகத் தொடர்புகொண்டு தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தவும், தொழில் வாய்ப்புகளைப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338273®=3&lang=1
***
SS/PD/SH