பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேச்சு
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2026 11:41PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசஷ்கியானுடன் தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தினார்.
அதிபர் பெசஷ்கியான், ஈரானின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமருக்கு விளக்கமளித்ததோடு, பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த தமது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்.
பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்புச் சூழல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த பிரதமர், அனைத்துப் பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
ஈரான் உட்பட அப்பகுதியில் உள்ள இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு இந்தியா அளிக்கும் முன்னுரிமையையும், எரிசக்தி மற்றும் பிற பொருட்களின் தடையற்ற போக்குவரத்தின் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.
இரு தலைவர்களும் தொடர்ந்து அவ்வப்போது பேச்சு நடத்த ஒப்புக்கொண்டனர்.
***
(Release ID: 2239341)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2303669)
வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam