நிதி அமைச்சகம்
நாட்டில் மின்னணு பணப் பரிவர்த்தனை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது
प्रविष्टि तिथि:
24 AUG 2026 1:57PM by PIB Chennai
நாட்டில் மின்னணு பணப் பரிவர்த்தனை தொடங்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2016 ஆகஸ்ட் 25 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், நிதிச் சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்த்ததில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
2016 – 17-ம் நிதியாண்டில் வெறும் 1.78 கோடியாக இருந்த ஆண்டு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, 2025 - 26-ம் நிதியாண்டில் 24,162 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது பரிவர்த்தனை எண்ணிக்கையில் சுமார் 13 ஆயிரம் மடங்கு அதிகமாகும்.
அதேபோல் பரிவர்த்தனை மதிப்பு 2016 – 17-ம் நிதியாண்டில் ரூ.0.07 கோடியாக இருந்த நிலையில், 2025 – 26-ம் நிதியாண்டில் ரூ.314 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது பரிவர்த்தனை மதிப்பில் 4 ஆயிரம் மடங்கிற்கும் அதிகமாகும்.
நாட்டின் மின்னணு பொது உட்கட்டமைப்பின் மிகவும் வெற்றிகரமான தூண்களில் ஒன்றாக யுபிஐ உருவெடுத்துள்ளது. இது பல்வேறு அமைப்புகளுக்கிடையே செயல்படக்கூடிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனை தளத்தை அளிக்கிறது. இதன்மூலம் செயலி வழியாக தனிநபர்களிடையேயான மற்றும் தனிநபர் – வணிகர் இடையேயான பரிவர்த்தனைகளை தடையின்றி மேற்கொள்ள முடிகிறது. தற்போது லட்சக்கணக்கான பயனர்களின் விருப்பக் கட்டண முறையாக இது மாறியுள்ளது. அத்துடன் நாட்டின் பணப் பரிவர்த்தனை முறையையும் மாற்றியமைத்துள்ளது.
மின்னணு இடைவெளியை குறைத்தல், நிதி சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், மின்னணு நிதிச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம், நாடு முழுவதும் தனி நபர்களையும், சமூகங்களையும் யுபிஐ வலுப்படுத்தியுள்ளதுடன், பரவலான பொருளாதார பங்கேற்பையும் ஊக்குவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302657®=3&lang=1
***
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2302883)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Khasi
,
English
,
Gujarati
,
Urdu
,
Nepali
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam