தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைச் சரிபார்ப்புக் குழு, பொதுச் சேவை ஒளிபரப்பு மூலம் அரசு நம்பகமான தகவல்களை அளிக்கிறது
प्रविष्टि तिथि:
12 AUG 2026 3:01PM by PIB Chennai
மத்திய அரசின் முதன்மை தகவல் முகமையாக திகழும் பத்திரிகை தகவல் அலுவலகம் பல்வேறு ஊடக தளங்கள் மூலம் வெவ்வேறு வடிவங்களில் உரிய நேரத்தில் நம்பகமான, துல்லியமான தகவல்களை அளிக்கிறது. பொதுச் சேவை ஒளிபரப்பின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் பிரசார் பாரதி முக்கிய பங்காற்றுகிறது. பிராந்திய மொழிகள், வட்டார மொழிகள் உட்பட பல்வேறு மொழிகளில், பல்வேறு தளங்களைப் பயன்படுத்தி தகவல்கள் பரப்பப்படுகின்றன.
அரசு, தமது திட்டங்கள், கொள்கைகள் தொடர்பான போலி செய்திகளைப் பரப்பப்படுவதைத் தடுப்பதற்காக பத்திரிகை தகவல் அலுவலகத்தில் உண்மை கண்டறியும் குழு பிரிவை உருவாக்கியுள்ளது. இப்பிரிவு, உண்மைச் சரிபார்ப்பு செயல்முறை மூலம் அரசின் அமைச்சகங்கள், துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர மத்திய அரசின் அமைப்புகள் தொடர்பான தகவல்களை சரிபார்க்கிறது.
தூர்தர்ஷன், ஆகாஷ்வாணி ஆகியவை தங்களுடைய செய்தி அறிக்கைகள், நிகழ்ச்சிகள், டிஜிட்டல் தளங்கள் மூலம் சரிபார்க்கப்பட்ட தகவல்களை அளிக்கின்றன.
இத்தகவலை, தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298189®=3&lang=1
****
TV/IR/SU/SH
(रिलीज़ आईडी: 2298576)
आगंतुक पटल : 15