தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
2030-க்குள் உலகளாவிய நேரடி நிகழ்வுகள் தலைமைத்துவ இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUL 2026 3:16PM by PIB Chennai
பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டுக்கான முக்கிய உந்துசக்தியாக நேரடி நிகழ்வுகள் (Live Events) பிரிவை அரசு அடையாளம் கண்டுள்ளது.
இந்தத் துறையின் நிலையான வளர்ச்சியை எளிதாக்குவதற்கும், 2030-ம் ஆண்டுவாக்கில் நேரடி நிகழ்வுகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதற்கும், நேரடி நிகழ்வுகள் மேம்பாட்டு பிரிவு (எல். இ. டி. சி) 2025 ஜூலையில் அமைக்கப்பட்டது. மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள், மாநில அரசுகள், தொழில்துறை சங்கங்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பிரதிநிதிகளுடன் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் இதற்குத் தலைமை தாங்குகிறார்.
எல். இ. டி. சி. யின் நான்கு கூட்டங்கள் 26.08.2025,16.10.2025,04.02.2026 மற்றும் 30.04.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்றுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291019®=3&lang=1
****
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2291372)
வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam