உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் பருவமழை நிலவரத்தை உள்துறை அமைச்சகம் முனைப்புடன் கண்காணித்து வருகிறது

प्रविष्टि तिथि: 23 JUL 2026 6:08PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பருவமழை நிலவரத்தை முனைப்புடன் கண்காணித்து வருகிறது. கனமழையால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க, பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தேவையான அனைத்து ஆதரவையும் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது.

 

2026-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், குஜராத், மகாராஷ்டிரா, தாத்ரா - நகர் ஹவேலி, டாமன், ஜம்மு காஷ்மீர் போன்ற நாட்டின் சில பகுதிகளில் கனமழை, நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

 

மாநில, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்களுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காக, உள்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையானது, இந்திய வானிலை ஆய்வுத் துறை, மத்திய நீர் ஆணையம், தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையம் உள்ளிட்ட பிற மத்திய முகமைகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகிறது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்களுக்கு முன்கூட்டிய எச்சரிக்கைகளைப் பரப்புவதுடன், இந்தக் கட்டுப்பாட்டு அறை அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது.

 

மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில அரசு முகமைகள், மாநில காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றுடன் இணைந்து இந்த அனைத்து இடங்களிலும் மீட்பு, நிவாரணப் பணிகளில் இந்தக் கட்டுப்பாட்டு அறை அயராது பணியாற்றியுள்ளது. மீட்புப் பணிகளுக்கான நேரத்தைக் குறைப்பதற்காக, தேசிய பேரிடர் மீட்புப் படை தனது குழுக்களைப் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் முன்கூட்டியே நிலைநிறுத்தியது. கடந்த ஒரு வாரத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களால் 52 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதே சமயம் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் 2206 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

உள்துறை அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்பு அமைச்சகமும், வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதற்கும், நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்கும் மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

 

நாடு முழுவதும் பருவமழைக்கு முந்தைய வெள்ளம், வெப்ப அலைகளுக்கான தயார்நிலை குறித்த ஆய்வுக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் 2026 மே 10 ஆம் தேதி நடைபெற்றது . அதன் தொடர்ச்சியாக, ஜம்மு - காஷ்மீரில் கனமழை, மேகவெடிப்பு, வெள்ளம், நிலச்சரிவுகள் தொடர்பான ஒட்டுமொத்த தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக, உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூன் 3-ம் தேதி மற்றொரு கூட்டம் நடத்தப்பட்டது . சார் தாம் யாத்திரை வழித்தடத்தில் உள்ள தயார்நிலையும் உள்துறை அமைச்சகத்தால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டது.

 

இடைவிடாத மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதங்களை மதிப்பிடுவதற்காக, அமைச்சகங்களுக்கு இடையிலான மத்தியக் குழு நாளை முதல் (25.07.2026) அசாமின் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளது.

 

சமீபத்திய மழையானது சில மாநிலங்களில் மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக, முன்னதாகக் கணிக்கப்பட்டிருந்த சுமார் 30 சதவீத மழைப் பற்றாக்குறையை இது ஏறத்தாழ 15 சதவீதமாகக் குறைத்துள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288435&reg=3&lang=1

(Release ID : 2288435)

****

TV/PLM/SH

 


(रिलीज़ आईडी: 2288662) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Khasi , English , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Odia , Kannada , Malayalam