பிரதமர் அலுவலகம்
சிக்கிமின் 50-வது உதய தினக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
प्रविष्टि तिथि:
28 APR 2026 3:00PM by PIB Chennai
சிக்கிம் கே ங்டாக்கில் இன்று (28.04.2026) நடைபெற்ற சிக்கிமின் 50-வது உதய தினக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பங்கேற்று, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான 30-க்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அர்ப்பணித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்பித்தார்.
பால்ஜோர் மைதானத்தில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர், சிக்கிம் மாநிலத்துடனான தனது ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தினார். அங்குள்ள ஆர்க்கிட் தோட்டங்களுக்குச் சென்ற தமது அனுபவத்தை விவரித்த பிரதமர், இயற்கையின் துடிப்பான வண்ணங்களாலும், அதன் செழுமையாலும் தான் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார். மாநிலத்தின் இயற்கைச் செல்வங்களைச் சுட்டிக்காட்டிய அவர், 'ஆர்க்கிட் பூந்தோட்டம்' என்றழைக்கப்படும் சிக்கிமின் 'கிழக்கு பகுதி, ஈடுஇணையற்ற அழகையும், அமைதியையும், ஆன்மீக மகிழ்ச்சியையும் வழங்குவதாகக் குறிப்பிட்டார். "இத்தகைய அனுபவம் பெரும் நற்பேறு இருந்தால் மட்டுமே வாய்க்கும். என் மனம் இப்போதும் அந்த வண்ணங்களிலும், அவற்றின் கொண்டாட்டத்திலும் மூழ்கியிருக்கிறது," என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சிக்கிமின் 50 ஆண்டுகாலப் பயணத்தை ஒரு தெய்வீகச் சூழலில் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். ஒரு நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும், அத்தகைய தெய்வீகச் சூழலில் நடைபெறுவதாகவும் அமையும்போது, அதன் பிரம்மாண்டம் பன்மடங்கு பெருகுகிறது என்று கூறினார். கலாச்சார நிகழ்ச்சிகள், கலைஞர்களின் பிரமிக்க வைக்கும் கலைநிகழ்ச்சிகள், மக்களின் உற்சாகம் மற்றும் மலைகளும் வானமும் இணைந்து உருவாக்கிய அழகிய காட்சி ஆகியவை பால்ஜோர் மைதானத்தில் ஒரு மாயாஜாலச் சூழலை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார்
சிக்கிம் மக்களைச் சந்திக்கும் தனித்துவமான அனுபவம் குறித்து பிரதமர் நெகிழ்ச்சியுடன் பேசினார். அம்மக்களின் மென்மை, எளிமை மற்றும் எப்போதும் தவழும் புன்னகை ஆகியவை தமக்கு எப்போதும் மன அமைதியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். முக்கிய நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, சிக்கிமைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், பத்ம விருது பெற்றவர்கள், கலைஞர்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட பல திறமையாளர்களைச் சந்தித்த பிரதமர், அவர்களுடன் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினார். "சிக்கிம் மக்களைச் சந்திப்பது எனக்கு எப்போதும் ஒரு தனித்துவமான மனநிறைவை அளிக்கிறது," என்று திரு மோடி கூறினார். முந்தைய நாள் மாலை நடைபெற்ற சாலைப் பேரணியை நினைவுகூர்ந்த பிரதமர், அது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்று விவரித்தார்..
சாலைகள், மின்சாரம், சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளை உள்ளடக்கிய, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான 30-க்கும் மேற்பட்ட திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டதாகவும், அவற்றுக்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 2023-ம் ஆண்டிற்குப் பிறகு வடக்கு சிக்கிம் பகுதிகளில் ஏற்பட்ட சவால்கள் குறித்தும், குறிப்பாகப் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். "எங்கெல்லாம் இணைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டிருந்தனவோ, அங்கெல்லாம் அவற்றை வலுப்படுத்துவதில் நாங்கள் முழு கவனம் செலுத்தியுள்ளோம்," என்று திரு மோடி வலியுறுத்திக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256220®=3&lang=1
***
SS/PKV/SH
(रिलीज़ आईडी: 2284184)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam