தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆகாஷ்வாணியின் 90-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புகைப்படக் கண்காட்சி தொடக்கம்

प्रविष्टि तिथि: 01 JUL 2026 6:23PM by PIB Chennai

ஆகாஷ்வாணியின் 90-வது ஆண்டு கொண்டாட்டங்கள் மற்றும் 2027-ஆம் ஆண்டில் இந்தியாவில் வானொலி ஒலிபரப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆகாஷ்வாணிக்கும் இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுக்கும் இடையிலான நீடித்த பிணைப்பைக் கொண்டாடும் வகையில் ‘ஸ்வர் பிரேரணா வீதிகா’ என்ற பிரத்யேகப் புகைப்படக் கண்காட்சி புதுதில்லியில் உள்ள ஆகாஷ்வாணி பவனில் இன்று தொடங்கப்பட்டது. பத்ம விபூஷண் பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா இக்கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

கடந்த ஒன்பது தசாப்தங்களாக, ஆகஷ்வாணி நாட்டின் முன்னணி பொதுச் சேவை ஒலிபரப்பாளராகச் செயல்பட்டு, புகழ்பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளை நாட்டின் லட்சக்கணக்கான நேயர்களுக்குக் கொண்டு சேர்த்து, இந்தியாவின் வளமான இசை பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளர்த்து வருகிறது. நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளைப் பெற்ற மற்றும் ஆகாஷ்வாணியுடன் நெருங்கிய தொடர்புடைய சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, பாரத ரத்னா விருது பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி, பண்டிட் ரவிசங்கர், லதா மங்கேஷ்கர், உஸ்தாத் பிஸ்மில்லா கான், பண்டிட் பீம்சென் ஜோஷி, டாக்டர் பூபேன் அசாரிகா மற்றும் பத்ம விபூஷண் விருது பெற்ற பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா, உஸ்தாத் அம்ஜத் அலி கான் உள்ளிட்ட 20 சிறந்த இசை மேதைகளின் உருவப்படங்கள் இக்கண்காட்சியில் திறந்து வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கௌரவ் திவேதி, ஆகாஷ்வாணியை நாட்டின் முன்னணி கலாச்சார நிறுவனங்களில் ஒன்றாக மாற்றிய சிறந்த கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல் கட்ட முயற்சி இது என்று குறிப்பிட்டார். மேலும், ஆகாஷ்வாணியின் கிளாசிக்கல் இசைக்கான ‘ராகம்’ மற்றும் பக்தி இசைக்கான ‘ஆராதனா’ ஆகிய டிஜிட்டல் சேனல்கள் யூடியூப் மற்றும் வேவ்ஸ் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் கிடைக்கின்றன என்றும் தெரிவித்தார்.

விழாவில் உரையாற்றிய பத்ம விபூஷண் பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா, ஆகாஷ்வாணியுடனான தனது இசைப் பயணம் அதன் 'சிறுவர் நிகழ்ச்சி'யின் மூலமே தொடங்கியது என்பதை நினைவு கூர்ந்தார். இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியாவின் முதன்மை சீடரான பண்டிட் ரூபக் குல்கர்னியின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279994&reg=3&lang=1

****

TV/EA/SH


(रिलीज़ आईडी: 2280135) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Kannada , Malayalam