பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் அதனை உரிய நேரத்தில் அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 16 APR 2026 3:19PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே எழுதிய ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.

பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை, முக்கிய அம்சமாக இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறையை நிறைவு செய்வதில், ஒரு நாள் கூட வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதன் அவசரத் தேவையை இது வலியுறுத்துகிறது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தக் கட்டுரையில், மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்படுவது, நம் அனைவருக்கும் மற்றும் நாடாளுமன்றத்திற்கும் முக்கியமான ஒரு தருணம் என்பதை எடுத்துரைக்கிறார்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி, தொகுதி மறுவரையறையை நிறைவு செய்வதில், ஒரு நாள் கூட வீணாகாமல் பார்த்துக் கொள்வது அவசரத் தேவை என்று அவர் வலியுறுத்துகிறார்."

***

(Release ID: 2252577)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2278831) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam